Sun. Jul 21st, 2019

மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹர் பணியிடை நீக்கம்: இணை ஆணையர் சின்ஹா உத்தரவு

47 Views

சென்னை: மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹரை பணியிடைநீக்கம் செய்து காவல்துறை இணை ஆணையர் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜவஹர், பதவி உயர்வு கிடைக்காததால் தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும், சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பெற்ற பதக்கங்களை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக நேற்று டுட்டரில் பதிவிட்டு காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக டிடுவிட்டரில் பதிவிட்ட காவல் ஆய்வாளர் ஜவஹரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர், 15 ஆண்டுகளாக பதிவி உயர்வுக்கான எந்த முன்னெடுப்புகளும் இல்லை என ஜவஹர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காவல் ஆய்வாளர் ஜவஹர் அவர்கள் வண்ணாரப்பேட்டை ஆய்வாளராக பணியாற்றிய போது ரவுடிகளின் கூடாரத்தை அதிரடியாக கைது செய்தார் என்பது குறிப்பிடதக்கது. கடந்த வருடம் பாதுகாப்பு பணியில் இருந்தபோது போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்ததை பார்த்த காவல் ஆய்வாளர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த வாலிபரை காப்பற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ செய்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!