Sun. May 19th, 2019

வாகன ஓட்டிகளுக்கு வேலூர் காவல்துறை எச்சரிக்கை

24 Views

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் சிலர் இரு சக்கர வாகனங்களில் உள்ள சைலன்சர்களில் அதிக சத்தம் வரும் வகையில் மாற்றம் செய்து அதிக சத்தம் எழுப்பக் கூடிய வகையில் ஆரன்களை பொருத்தி அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பொது இடங்களில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதால் அடிக்கடி விபத்துகளும், மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், பாதசாரிகளுக்கு எரிச்சலையும் ஏற்படுத்துவதாக தெரிய வருகிறது.

எனவே அத்தகைய நபர்களை கண்டறிந்து அந்த வாகன ஓட்டிகளின் மீது உரிய சட்டப் பிரிவுகளில் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது மேலும் இம்மாதிரியான வழக்குகளை தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் ஆரன்கள் மற்றும் சைலன்ஸர்களில் மாற்றம் ஏதும் செய்யாமல் மோட்டார் வாகனம் விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை ஓட்ட வேண்டும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!