Wed. May 22nd, 2019

காஞ்சிபுரம் தேர்தல் பணிக்கு  ஓய்வு பெற்ற காவலர்களுக்கு அழைப்பு

56 Views

காஞ்சிபுரம்: நடைபெறவிருக்கும் 17 வது மக்களவைத் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, IPS வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காஞ்சிபுரத்தில் வருகின்ற 18 ம் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஓய்வு பெற்ற இராணுவத்தினர், காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சிறைத்துறையினர், வனத்துறையினர் தங்களுடைய அடையாள ஆவனங்களுடன் இன்று (ஏப்ரல் 16) மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு அறிக்கை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!