Wed. Aug 21st, 2019

வேலூரில் “POLL POLICE APP” , வேலூர் SP அறிமுகம்

95 Views

வேலூர்:  மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறைக்கு உதவும் விதத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் உடன் இணைந்து Poll Police app உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று 15.04.2019 ஆம் தேதி வேலூர் சரக காவல் அலுவலகத்தில் காவல்துறை துணை தலைவர் திருமதி வனிதா இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களினால் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஆப் மூலமாக மாவட்டத்தில் மொத்தம் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் விவரங்கள், அதில் நியமிக்கப்பட்ட காவல் மற்றும் இதர அலுவலர்களின் விவரங்கள், அவர்களின் தொலைபேசி எண்கள் ஆகியவைகளை இந்த ஆப் மூலமாக பணியில் உள்ள அலுவலர்கள் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ள இடங்கள்,(GPS LOCATION) மற்றும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு செல்வதற்கு ஏதுவாக இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்று வேலூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!