Wed. Jul 17th, 2019

திருச்சியில் தேர்தல் DGP தலைமையில் கலந்தாய்வு

83 Views

திருச்சி: தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18 இல் நடைபெற உள்ளது. இதில் திருச்சி உள்ளிட்ட மத்திய மண்டல பகுதியில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலின்போது வாக்குப்பதிவு எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையுமின்றி நேர்மையாகவும் அமைதியான முறையிலும் நடைபெற காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் படையினர் தேர்தல் விதிமுறைகளின்படி பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் சிறப்பு டிஜிபி திரு.அசுதோஷ் சுக்லா தலைமையில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மத்திய மண்டல காவல் ஐ.ஜி திரு.வரதராஜீலு, டிஐஜி திருமதி.லலிதா லட்சுமி, திருச்சி காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் மற்றும் கரூர், தஞ்சை, பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்ட காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!