Wed. Aug 21st, 2019

தூத்துக்குடியில் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

93 Views

தூத்துக்குடி : தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தலை அமைதியாக நடத்திட காவல் கண்காணிப்பாளர் திரு.முரளி ரம்பா தலைமையில் துணை இராணுவப் படையினர், சிறப்பு காவல் படையினர், மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடத்தப் படவுள்ளன. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல்களுக்கு வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 2 நட்சத்திர வேட்பாளர்கள் உட்பட 37 பேர் போட்டியிடுகின்றனர். இந்த மக்களவைத் தொகுதியில் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் கூடுதலாக மத்திய பாதுகாப்பு படையினர், தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அச்சமின்றியும் அமைதியாகவும் வாக்கு அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடியில் இன்று கொடி அணிவகுப்பு பேரணி ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம், விக்டோரியா ரோடு உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது.

தூத்துக்குடி கொடி அணிவகுப்பை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா துவக்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வாக்குப்பதிவு அமைதியாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து 2 மத்திய துணை ராணுவத்தினர். தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2 படை பிரிவினர், மற்றும் தமிழ்நாடு ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என பல்வேறு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இவர்கள் பதட்டமான, மிகவும் பதட்டமான வாக்கு சாவடிகளில் கூடுதலாக பணி அமர்த்தப்படுவார்கள் ஆகவே பொது மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கலாம் என்றார்.

பேரணிக்கு ஏடிஎஸ்பி திரு.வேதரத்தினம், நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை கண்காணிப்பாளர்கள் திரு.முத்தமிழ்இ திரு.மாணிக்கம், திரு.ரமேஷ், திரு.மாரியப்பன் ஆகியோர் பேரணியை வழி நடத்தினர்.

ஆய்வாளர்கள் திரு.பார்த்திபன், திரு.ஜெயபிரகாஷ், திரு.ஜீவன்குமார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மகராஷ்ட்ரா சிறப்பு காவல்படை, எல்லைப் பாதுகாப்பு படை, மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினர், உட்பட 500 காவல்துறையினர் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!