Wed. May 22nd, 2019

டிக் டாக் விடியோ எடுத்து பொதுமக்களை பயமுறுத்திய இளைஞர்கள் கைது

சாலையில் கத்தியை வைத்து நெருப்பு வரும்படி தேய்த்து டிக் டாக் விடியோ எடுத்து பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் நடந்து கொண்ட இளைஞர்கள் கைது

செய்தியை பகிர்ந்து கொள்ள:
53 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த தீயம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சரண்குமார் (வயது 20), மணிகண்டன் என்ற மதி (19). நண்பர்களான இருவரும் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தங்களிடம் இருந்த கத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டு, கூச்சலிட்டபடி சென்றனர்.

இதுபற்றி செங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சரண்குமார், மணிகண்டன் இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து பட்டா கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள், ‘டிக்-டாக்’ செயலியில் வீடியோ எடுப்பதற்காக இதுபோல் கத்தியை தரையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டபடி சென்றதாக தெரிவித்தனர்.

இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்குன்றம் காவல் ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் தெரிவித்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!