Wed. Jul 17th, 2019

மீஞ்சூரில் பொதுமக்களிடம் அச்சத்தைப் போக்கும் வகையில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு

107 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பில் ஈடுபடுத்துவதற்காக வந்துள்ள 200க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் பொதுமக்களிடம் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் IPS தலைமையில் மீஞ்சூரில் இருந்து அத்திபட்டு வரை பேண்டு வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

இதில் பொன்னேரி ஆய்வாளர் திரு.பால்ராஜ், மீஞ்சூர் ஆய்வாளர் திரு.வெங்கடேசன், திருப்பாலைவனம் ஆய்வாளர் திரு.மூர்த்தி, சோழவரம் ஆய்வாளர் திரு.வடிவேல்முருகன் உட்பட காவலர்கள் கலந்து கொண்டனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!