Wed. May 22nd, 2019

தேனியில் போலி பீடிகள் விற்பனை செய்தவர் கைது

45 Views

தேனி: தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலி செய்யது பீடிகள் விற்பனை செய்வதாக செய்யது பீடி டிரேடிங் கம்பெனி கிளை மேலாளர் அற்புதானந்தா (54) என்பவர் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்ததில் சீப்பாலக்கோட்டை பகுதியில் அல்லிநகரத்தை சேர்ந்த ரங்கராஜ் (34) என்பவர் ஆம்னி வேனில் போலியான லேபிள்கள் ஒட்டப்பட்ட பீடிகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ரங்கராஜை கைது செய்த சார்பு ஆய்வாளர் திரு.அழகுராஜா அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் 482, 486, 420 IPC & 103 (a) 104 Indian Trade Mark Act 1999ன் கீழ் வழக்குப்பதிவு செய்து ரூபாய் 15,600/- மதிப்பிலான 52 போலி பீடி பண்டல்கள் மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்து ரெங்கராஜை சிறையில் அடைத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!