Wed. Aug 21st, 2019

தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலைத்திற்கு மத்திய அரசு விருது

218 Views

தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலைத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் நடந்த சிறந்த காவல் நிலையங்கள் தேர்வில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, காவலர்களின் செயல்பாடு, மனு விசாரணை, பொதுமக்கள் நல்லுறவு போன்ற செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டிற்கான விருதினை பெரியகுளம் காவல் நிலையம் தமிழக அளவில் முதலிடமும் இந்திய அளவில் 8வது இடம் பிடித்தது. இந்நிலையில் 02.04.2019ம் தேதி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் DGP திரு. ராஜேந்திரன், IPS அவர்களிடம் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் தரச்சான்றிதழ் விருதினை பெற்றுக்கொண்டார். இது தேனி மாவட்ட காவல் துறைக்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!