Mon. Sep 16th, 2019

ஈரோடு, சென்னிமலையில் CCTV கேமிரா பொருத்தம், பொதுமக்கள் வரவேற்பு

238 Views

ஈரோடு: ஈரோடு காவல் துறை சார்பாக  சென்னிமலை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராம மற்றும் பொது இடங்களில் கேமரா பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதில் எக்கட்டாம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட வெப்பில், அய்யம்பாளையம், மற்றும் பழனி ஆண்டவர் கோவில், தோப்புபாளையம், சிறுகளஞ்சி, பணியம்பள்ளி, காமராஜர் நகர், மேம்பாளையம், மற்றும் அனைத்து பள்ளிக்கூட பகுதி மற்றும் சென்னிமலை பஸ்நிலையம் ஆகிய பொது இடங்களில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ்,IPS அவர்கள் அறிவுறுத்தலின்படி, பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார் மேற்பார்வையில், சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜ் தலைமையில் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

இனிமேல் குற்ற சம்பவங்கள் நடந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்று அனைத்து பகுதி பொது மக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜ்.
சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜ் தலைமையிலான காவல்துறையினர் குற்ற சம்பவங்களில் துரித நடவடிக்கை, இரவு நேர ரோந்து பணி என அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் CCTV கேமிரா பொருத்தப்பட்டிருப்பது வரவேற்க்க தக்கது என்பது அப்பகுதி மக்களின் கருத்து. இவருடைய பணி மேலும் இப்பகுதியில் சிறக்க ஈரோடு மாவட்ட போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்.

ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!