Wed. Jul 17th, 2019

ஐ.சி.எப். (K7) காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ராமையா மரணம்

233 Views

சென்னை: சென்னை K.7 ஐ.சி.எப். காவல் நிலையத்தில் கடந்த 03.03.19ம் தேதி முதல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திரு.ராமையா (49) 2000 Batch  சேர்தவர்.

இவர் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி சரஸ்வதி மற்றும் மகன் நிக்கேஷ் (18) அரும்பாக்கம், வைஷ்ணவா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.

இவர் 08.03.19 ம் தேதி இரவு 22.30 மணிக்கு பணிமுடித்து வீட்டிற்க்கு சென்றதிலிருந்து BP அதிகமானதால் தலைவலி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 09.03.19 ம் தேதி காலை முதல் வீட்டிலிருந்து ஓய்வு எடுத்து வந்தவரை இரவு 22.00 மணியளவில் AC அயனாவரம் திரு. பாலமுருகன் அவர்கள், திரு.ராமையா அவர்களை அவரது வீட்டிலிருந்து அழைத்து கொண்டு கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள நோபில் ஆஸ்பிட்டலில் ICU Ward ல் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு மூளையில் இரத்தகசிவு இருப்பதாகவும், அதனால் பல்ஸ்ரேட் குறைவாக இருப்பதாகவும் இதேநிலை நீடிக்குமானால் அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்படும் எனவும் கூறியதாகவும் அதனை தொடர்ந்து, மேற்படி ஆய்வாளர் அவர்கள் 10.03.19 இரவு சுமார் 23.00 மணியளவில் சுபுபுபுர் அழைத்துவரப்பட்டு,  இராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் 214ல் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு 11.03.19 இரவு 23.00 மணிக்கு தலையில் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சுயநினைவுடன் நல்லமுறையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு மூளையில் தொடர்ந்து வீக்கம் அதிகரித்து வருவதாக மீண்டும் 17.03.10 மாலை மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  ward N2 ல் சிகிச்சை பெற்று வந்தார். 18.03.19 இரவு 23.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

காவல் ஆய்வாளர் ராமையா நேர்மையான அதிகாரி எனப் பெயர் எடுத்தவர், அவர் பணியாற்றிய அனைத்துக் காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர். அத்துடன் யாரிடமும் எந்தவித கையூட்டும் பெறாமல் நேர்மையாகப் பணியாற்றக் கூடியவர் என்கிற பெயரைப் பெற்றவர்.

நேர்மையான அதிகாரியாகச் செயல்பட்ட ராமையாவிடம் போதிய பணம் இல்லாததால் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடல் இவரது அண்ணன் திரு. சாமி அவர்களிடம் ஒப்பபைக்கப்பட்டு 19.03.19 அதிகாலை 02.40 மணிக்கு அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள சிஙகம்பட்டிக்கு இலவச ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துசெல்லப்பட்டது. அவருடைய இறுதி சடங்கு இன்று அவருடைய சொந்த ஊரில் நடைபெற உள்ளது.

காவல் ஆய்வாளர் திரு.ராமையா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!