Sun. Jul 21st, 2019

தேர்தல் அறிவிப்பு, 106 பேர் கைது, துப்பாக்கிகள் ஒப்படைப்பு

தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று 106 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:
141 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளுடன், திருப்போரூர் சட்டப்பேரவைக்கும் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் நேரங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 106 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

துப்பாக்கிகள் ஒப்படைப்பு: இதுதொடர்பாக, காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி கூறியது: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்போர், அவற்றை ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளனர். துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் 289 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் 87 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர் என அவர் கூறினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!