Sun. May 19th, 2019

கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதிகள் பதவியேற்பு

கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதியாக பாலாஜி ராஜு மற்றும் துணை பிரதேச தளபதியாக வித்யாஸ்ரீ தர்மராஜ் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:
100 Views

கோவை: மேற்கு மண்டல காவல்துறை ஐஜி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

காவல்துறைக்கு உறுதுணையாக தமிழக ஊர்க்காவல் படை விளங்கி வருகிறது. இது தன்னார்வ சேவை அமைப்பாகும். தமிழகம் முழுவதும் 15,000 ஊர்க்காவல் படையினர் சேவையாற்றி வருகின்றனர். இதில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் பகுதி நேர சேவையாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர்.

அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சீருடைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஊர்க்காவல் படை 387 ஊர்க்காவலர்களை கொண்ட தனித்துவம் நிறைந்த அமைப்பு.

மேட்டுப்பாளையம் அலகு, துடியலூர் அலகு, பொள்ளாச்சி அலகு என மூன்று குழுக்களை உள்ளடக்கியது. கோவை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பாதுகாப்பு பணிகளிலும், கோவில் திருவிழாக்களிலும், இரவு ரோந்து பணிகளிலும், தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் கோவை மாவட்ட ஊர்க்காவல் படையினர் பல்வேறு சமுதாய சேவைகளிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர். நக்சல் தடுப்பு பிரிவிலும் கோவை மாவட்ட ஊர்க்காவல் படையினர் இணைந்து திறம்பட செயலாற்றுகின்றனர்.

மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் தமிழக காவல் துறையினருடன் இணைந்து முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரதேச தளபதி பாலாஜி ராஜூ தெரிவித்தார்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!