Wed. May 22nd, 2019

மகாபலிபுரத்தில் மாணவர் காவல் படை உதயம்

86 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காவல் படை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சந்தோஷ் ஹைதிமானி உத்தரவின் பேரில்  துவங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடக்கும் மாணவ ஒழுக்க சீர்கேடுகளை தவிர்க்க ஒழுக்கம், பிறரிடம் நட்புணர்வு உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித் துறை மாணவ காவல் படையை ஆரம்பித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ம், 9ம் வகுப்புகளில் 22 மாணவர், 22 மாணவியர் என 44 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தலைமையாசிரியர் சேரன்,  மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் திரு.ரவிகுமார், மாணவ படை குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல்துறையினர் குறித்த அச்சம் போக்க, மாமல்லபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் செயல்பாடுகள், பலவகை துப்பாக்கிகள், கைவிலங்கு, வாக்கி டாக்கி தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்டவை குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டன.

காவலர்கள் வாரத்தில் சில நாட்கள், பள்ளிகளில் முகாமிட்டு மாணவர்களுக்கு தீய பழக்கங்கள் கைவிடல், போலீஸ் நட்புறவு, உளவியல் தீர்வு குறித்து பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!