Sun. May 19th, 2019

3500 போலீசார் பாதுகாப்பு வளையத்தில் காஞ்சிபுரம்

79 Views

காஞ்சிபுரம்: சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில், பிரதமர் மோடி நாளை (மார்ச் 6) பங்கேற்கும் பா.ஜ.க பொதுக்கூட்டத்திற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். செங்கல்பட்டு அடுத்த கிளாம்பாக்கத்தில் நடைபெறும் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் மேடை அமைப்பதுஇ வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு மற்றும் டில்லி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்நிலையில் நாளை நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு ஆறு மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. திரு. நாகராஜன் தலைமையில் மூன்று டி.ஐ.ஜி., நான்கு காவல் கண்காணிப்பாளர்கள், 25 காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் 3,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!