Wed. Jul 17th, 2019

தமிழக போலீசார் 78 பேர் உளவுதுறைக்கு பணியிடமாற்றம்

213 Views

சென்னை: தமிழத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவலர்கள் , 78 பேர் உளவுத்துறைக்கு பணியிட மாற்றம் செய்து உளவுத் துறை, ஐ.ஜி. சத்தியமூர்த்தி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

உளவுத் துறையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் அங்கு பணியாற்ற ஏற்கனவே விண்ணப்பித்து இருந்த காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் அபிராமபுரம் உதவி ஆய்வாளர் திரு.பிரதீப், மயிலாப்பூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.அலெக்ஸ், ஐஸ்ஹவுஸ் காவல் உதவி ஆய்வாளர் திரு.கணேஷ் பாபு ஆகியோர் சென்னையில் உள்ள உளவுத் துறை தலைமை இடத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த, உதவி ஆய்வாளர்கள், தலைமை மற்றும் முதல் நிலை காவலர்கள் என 78 பேர் நேற்று பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் சென்னைக்கு மட்டும் 22 பேர் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!