Wed. Aug 21st, 2019

கள்ள நோட்டு கும்பலை கைது செய்த தனிப்படையினருக்கு திருச்சி காவல் ஆணையர் பாராட்டு

183 Views

திருச்சி மாநகரில் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட முயற்சிக்கும் குற்றவாளிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுபடி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை (26.02.2019) அன்று கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்றல் நகர் பகுதில் தனிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அவ்வழியே ஒரு இருசக்கர வாகனகத்தில் வந்த மூன்று நபர்களை நிறுத்தி அவர்களை விசாரித்தனர்.

வுpசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த பாட்ஷஷா, (36), கனகராஜ்,(34), தஞ்சாவூர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா சபரேஸ் (26), என தெரிவித்தனர். அவர்களில் பாட்ஷா என்பவரது கையில் வைத்திருந்த துணிப்பையை சோதனை செய்ய அதில் ரூ.2000/- மற்றும் ரூ.500/- நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தது தெரிய வந்தது. அவற்றை சோதனை செய்ததில் அவைகள் அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என தெரிய வந்தது.
இது குறித்து மேற்படி மூவரிடமும் விசாரிக்க, பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அவர்கள் மூவரும் மேற்படி கள்ள நோட்டுக்களை பாட்ஷh வீட்டில் கலர் ஜெராக்ஸ் இயந்திரம் வைத்து, அதன் மூலம் தயாரித்து பொது மக்களிடம் பழக்கத்தில் விட இருந்தாக ஒப்புக் கொண்டனர்.

மேற்படி மூவரையும் கே.கே.நகர் காவல் நிலைய குற்ற எண். 102/19, ச/பி. 489 (A), (B), (C), (D)இ.த.ச. பிரிவின் படி வழக்கு பதிவு செய்தும், அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1)ரூபாய் 11,72,000/- மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் -586, 2) ரூபாய் 2,39,000/- மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் -478, (மொத்த மதிப்பு ரூ.14,11,000/-), 3) கலர் ஜெராக்ஸ் இயந்திரம் -1(மதிப்புள்ள ரூ.3,000/-), 4) கட்டிங் மெஷின் -1(மதிப்பு ரூ.1,000/-), 5) அவர்கள் பயன்படுத்திய ரூ.25,000/- மதிப்புள்ள  இருசக்கர வாகனம் -1 ஆகியவற்றை கைப்பற்றி மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேற்படி வழக்கில் குற்றவாளிகள் மூவரை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.14,11,000/- மதிப்புள்ள கள்ள நோட்டுக்களையும், ரூ.29,000/- மதிப்புள்ள பொருள்களையும் கைப்பற்றிய தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!