Wed. Aug 21st, 2019

திருச்சியில் ஷேர் ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை

147 Views

திருச்சி: திருச்சி மாநகரில் அதிக வாகன போக்குவரத்து நெருக்கத்தின் காரணமாக ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு.அ.அமல்ராஜ்,IPS  அவர்களின் உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகரப் பகுதிகளில் 22.02.2019 அன்று திருச்சி மாநகர போக்குவரத்து (தெற்கு மற்றும் வடக்கு) காவல்துறை சார்பில் மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனச் சோதனை மேற்க்கொள்ளப்பட்டது.

அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற 12 ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மேலும் இனிவரும் காலங்களில் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றால் ஆட்டோக்கள் இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் எழுத்து மூலமாக ஒப்புகை பெற்றுக்கொண்டு நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களை அன்று மாலை உரியவரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்று விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்த்திடும் வகையில் திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஒட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவு பயணிகளை ஏற்றிச் செல்லுமாறும், அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்ல கூடாது எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு.அ.அமல்ராஜ்,IPS அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!