Wed. Jul 17th, 2019

காவல்துறை  விளையாட்டு வீரர்களுக்கான போட்டியில் 28 பதக்கங்களை பெற்ற தமிழக காவல்துறை  வீரர்கள்

அகில இந்திய மூத்த தடகள விளையாட்டு வீரர்களுக்கான போட்டியில் 28 பதக்கங்களை பெற்ற தமிழக காவல்துறை விளையாட்டு வீரர்கள்

செய்தியை பகிர்ந்து கொள்ள:
152 Views

அகில இந்திய மூத்த விளையாட்டு வீரர்களுக்கான 40-வது தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த 05.02.2019 முதல் 10.02.2019 வரை நடைப்பெற்றது. மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் இந்தியா முழுவதிலிருந்தும் சுமார் 4000 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 25 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறையினர் 14 தங்கப்பதக்கமும்¸ 5 வெள்ளிப்பதக்கமும் மற்றும் 9 வெண்கல பதகங்களும் சேர்த்து மொத்தம் 28 பதக்கங்களை பெற்றுள்ளனர். மேலும் தமிழ்நாடு ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தையும்¸ பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தையும் பெற்று ஓட்டு மொத்த சாம்பியன் பட்டங்களையும் பெற்று முன்னிலை வகித்துள்ளனர்.

இவ்விளையாட்டுப் போட்டிகளில் 40 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தடகள விளையாட்டுப் போட்டியில் திருச்சி மாநகர காவல்துறையை சேர்ந்த திரு.அ.மயில்வாகனன், காவல் துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து அவர்கள் கலந்து கொண்டு 4 x 100 தொடர் ஓட்டப்பந்தயம் மற்றும் 4 x 400 தொடர் ஓட்டப்பந்தயம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்ற திருச்சி மாநகர காவல் துறையை சேர்ந்த திரு.மயில்வாகனன், காவல் துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து அவர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு.அ.அமல்ராஜ்,IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!