Sun. May 19th, 2019

தூத்துக்குடி மாவட்டத்தில் 19 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

135 Views

3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.  நெல்லை சரக டி.ஐ.ஜி. திரு.கபில்குமார் சரத்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திரு.செல்வக்குமார், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்துக்கும்,

2. தூத்துக்குடி மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சாகுல்ஹமீது, நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்துக்கும்,

3. கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ஜூடு, நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி காவல் நிலையத்துக்கும்,

4. எட்டயபுரம் காவல் ஆய்வாளர் கலா, நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்துக்கும்,

5. திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சாந்தி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும்

6. தூத்துக்குடி மாசார்பட்டி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, நெல்லை மாவட்டம் குருவிகுளம் காவல் நிலையத்துக்கும்,

7. திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ஷீஜாராணி நெல்லை மாவட்டம் பனவடலிசந்திரம் காவல் நிலையத்துக்கும்,

8. கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சோபா ஜென்சி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்துக்கும்,

9. திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.சோமன்ராஜன், நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலையத்துக்கும்,

10. தூத்துக்குடி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ஜெயபிரகாஷ், தூத்துக்குடி மத்திய பாகத்துக்கும்,

11. திருச்செந்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.கிங்ஸ்லி தேவ் ஆனந்த், ஆத்தூர் காவல் நிலையத்துக்கும்

12. சாத்தான்குளம்  காவல் ஆய்வாளர் திரு.ராஜசுந்தர், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்துக்கும்,

13. நாசரேத் காவல் ஆய்வாளர் திரு.ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காவல் நிலையத்துக்கும்,

14. தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு.முத்து, கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கும்,

15. தூத்துக்குடி மது ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.இசக்கிமுத்து, கன்னியாகுமரி மாவட்டம் நேசமணிநகர் காவல் நிலையத்துக்கும்,

16. தூத்துக்குடி பசுவந்தனை காவல் ஆய்வாளர் திரு.ஹரிகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்துக்கும்,

17. தூத்துக்குடி மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திரு.ரேனியஸ் ஜேசுபாதம், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்துக்கும்,

18. கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சுகதேவி, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கும்,

19. ஆத்தூர்  காவல் ஆய்வாளர் மீனா, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கள்மங்களம் காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!