Mon. Sep 16th, 2019

நாட்டிற்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு உங்கள் சல்யூட் டை பதிவு செய்யுங்கள்

200 Views

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் சென்ற வாகனத்தின் மீது 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி, வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 இராணுவ வீரர்களும் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு தலைவர்களும், உலக நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் மக்கள் கொதிப்படைந்து உள்ளனர். ஆங்காங்கே பாக். கொடிகள் எரிக்கப்படுகின்றன. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வீரமரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் ஆழ்ந்த இரங்கலை கீழ் உள்ள கருத்து பெட்டியின் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!