Mon. Sep 16th, 2019

ஈரோடு மாவட்டத்தில் ஹலோ சீனியர் திட்டத்திற்கு வரவேற்பு, SP திரு.சக்தி கணேசனுக்கு பாராட்டு

343 Views

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதியவர்கள், தங்கள் பிரச்சனை, கோரிக்கை, நிலுவைகள் குறித்து, நேரடியாக புகார் வழங்கும் திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன், IPS கடந்த வாரம் துவக்கி வைத்தார்.

ஈரோடுமுதியோர்களுக்கு உதவும் ஹலோ சீனியர் திட்டத்திற்கு தினமும் 20க்கு மேற்பட்ட பொதுமக்கள் அழைப்பு விடுக்கின்றனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன், IPS தெரிவித்தார்.

இந்த அவசர தொலைபேசி எண் 96558 88100 என்ற எண்ணிலும், 100 என்ற காவல் கட்டுப்பாட்டு எண்ணிலும் முதியவர்கள் அழைத்து புகார்கள் தெரிவிக்கலாம். இதன் மூலத் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன், IPS கூறுகையில், சட்ட ரீதியான பிரச்சனையாக இருந்தால் புகார் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. எங்களால் முடிந்த அளவு, பிற துறையினருடன் பேசி தீர்வு காண்கின்றோம். இத்திட்டம் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படும் போது, நடக்க முடியாதவர்கள், வீட்டில் முடங்கி கிடப்போர், அடைத்து வைக்கப்பட்ட முதியவர்களுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இத்தகைய அவசர தொலைபேசி எண் அறிவித்து இருப்பது ஈரோடு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசனுக்கு நன்றியையும் பாராட்டையும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!