Wed. Jul 17th, 2019

கும்பகோணத்தில் முன் விரோதம் காரணமாக முன்னால் ரவுடி வெட்டிக் கொலை குற்றவாளிகள் கைது

181 Views

தஞ்சை: கும்பகோணம் மாதுளம் பேட்டை ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகனான சக்திவேல் என்பவர் அதே பகுதியில் இருந்த புதிய கழிவு நீர் தொட்டியில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக மேற்கு காவல் நிலையத்திற்க்கு இன்று( 14-1-2019) காலை வந்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு . செங்கமலக் கண்ணன் ஆய்வாளர் திரு .ரமேஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர், காவலர்கள் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று இறந்த சக்திவேல் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

கொலையான ரவுடி சக்திவேல்

அதன் பின்னர் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .S.S. மகேஸ்வரன் அவர்களின் உத்தரவின்படி DSP செங்கமலக்கண்ணன் வழிகாட்டுதலின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமாரின் ஆலோசனைபடி காவல் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் SSI.ராஜா,SSI செல்வக்குமார், மற்றும் HC.ரமேஷ்குமார், சண்முகம் ,குகநேசன்,கதீஸ்,சுரேஸ்,ஜம்புலிங்கம்,சிவசங்கர், கொண்ட சிறப்பு தனி படை போலீசார்கள் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று தீவிர விசாரனை மேற் கொண்டார்கள். இதில் கொலையான சக்திவேல் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் இதே பகுதியில் உள்ள

இவருக்கு போட்டியாக இருந்த மற்றொரு ரவுடியான தமிழ்செல்வன் (24)  மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவனது நண்பர்கள் மணிமாறன்( எ) காளிதாஸ் 3-விஜய் (22), ராஜகுரு (25), பரணிதரன் (24), கார்த்திக் (29) சண்முகம்
ஆகியோர் முன் விரோதம் காரணமாக நேற்று இரவு சுமார் 8-9 மணியளவில் பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு ரவுடி சக்திவேலை கொலை செய்து கழிவு நீர் தொட்டியில் வீசி சென்றதும் விசாரனையில் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து நாச்சியார்கோயில் அருகில் பதுங்கி இருந்த இக்கொலையில் சம்பத்தப்பட்ட குற்றவாளிகள் ஆறு பேரையும் சம்பவம் நடந்ததாக தகவல் வந்த மூன்று மணி நேரத்தில் சிறப்பு தனிப் படை போலீசார் கைது செய்துள்ளார்கள் என்பது கூறிப்பிட தக்கதாகும்.

நமது சிறப்பு செய்தியாளர்


குடந்தை

ப.சரவணன்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!