சிவகங்கை மாவட்டம்: காளையார்கோவில் அருகே காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மரிய ராணி(25) என்பவர் தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் 03.10.2019 அன்று இரவு 7.00 மணிக்கு மாணகிரியில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தன் கையில் வைத்திருந்த *52* பவுன் நகை பையை கல்லல் தேவப்பட்டு பாலம் அருகே தவறவிட்டனர். அவ்வழியாக வந்த பிலம்பர் வேலை செய்யும் கருப்பையா, சபரி, பில்லர், ஆகியோர் கீழே கிடந்த பையை கல்லல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக நகை பையை தவறவிட்ட மரியா தம்பதியினர் கல்லல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த போது காவல் ஆய்வாளர் திரு. சாதுரமேஷ் அவர்கள் *52* பவுன் தங்க நகையை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தார். *மேலும் தவறவிட்ட நகையை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த கல்லல் காவல் நிலைய ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டினர்.*
சிவகங்கையில் நகைகளை பறித்தவனை காவல்துறையினர் கைது

Read Time1 Minute, 26 Second