Mon. Sep 16th, 2019

கும்பகோணத்தில் வடமாநில பெண்ணை பாலியல் செய்த குற்றவாளிகளை சில மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்

255 Views

தஞ்சாவூர்: கும்பகோணம் புகைவண்டி நிலையத்தில் கடந்த 2.12.2018 ம் தேதி புது தில்லியில் இருந்து ஒரு தனியார் வங்கியில் வங்கி பணி பயிற்சிக்காக கும்பகோணம் வந்த 23 வயது பெண் இரவு புகைவண்டி நிலையத்தின் வாயிலில் இருந்து ஒரு ஆட்டோவில் ஒரு குறிப்பிட்ட தங்கும் விடுதியின் பெயரை சொல்லி அங்கு போக ஆட்டோவில் ஏறினார்.

அப்படி செல்லும் பொழுது அந்த ஆட்டோ டிரைவர் குறிப்பிட்ட இடத்திற்க்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றி வந்ததால் சந்தேகமடைந்த அந்த பெண் ஒரு இடத்தில் இறங்கி வேறு ஏதேனும் ஆட்டோ கிடைக்குமா என எண்ணி அங்கிருந்து சுமார் 1/2 K.m நடந்து வரும் வழியில் ஒரு புதர் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த 4 நண்பர்களின் பார்வையில் படுகிறார்.

உடனே அவர்களில் இருவர் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணிடம் வந்து தங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என கேட்டு அவருக்கு உதவி செய்வது போல் நடித்து ஒரு காட்டுப்பகுதிக்கு அந்த பெண்ணை கடத்தி சென்று 4 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்து விட்டு பின்னர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு ஓரு ஆட்டோவில் ஏற்றி குறிப்பிட்ட தங்கும் விடுதியில் இறக்கி விட சொல்லி நான்கு பேரும் தலைமறைவாகி விடுகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் அன்று இரவே தந்த புகாரின் அடிப்படையில் கும்பகோணம் காவல்துறையினர் உடன் விசாரணையை துவங்கினார்கள். வடமாநில பெண் இரவில் நடந்த சம்பவம் குறித்து வங்கியில் பணிபுரியும் நண்பர் ஒருவரின் மூலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் Cr.no.295 /18 U/s.366, 354( B),376(D),506 ll,IPC ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு Dr.திரு செந்தில்குமார் அவர்கள் உத்தரவு படி கும்பகோணம் வட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.செங்கமலக்கண்ணன் , அவர்கள் மேற்பார்வையில் கும்பகோணம் மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் திரு .ரமேஸ்குமார், உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் ( Crime Intelligence ), ssi.செல்வக்குமார் Intelligence ), SSI.ராஜா, ரமேஷ், குகன் , கதிஷ், சிவசங்கர், சண்முகம் , வினேத் ,சுரேஷ், ஜம்புலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அமைக்கப்பட்டு தனிப்படையினர் சம்பவம் நடந்த இடத்தினை பார்வை இட்டனர்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்ததில் தன்னை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநரின் Cell phone யை வாங்கி தன்னை கடத்தி சென்றவர்களில் ஒருவன் பேசியதாக கூறினார். இதையடுத்து si.கீர்த்திவாசன் உடனடியாக செயல்பட்டு ஆட்டோ ஓட்டுநரை கண்டு பிடித்து அவனது Cellphone யை கைப்பற்றி உடனடியாக அதிலிருந்து பதிவுகளை கண்டு சம்பவத்தை பற்றி புகார் அளிக்கப்பட்டு சுமார் 4 மணிநேரத்திற்குள் இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்

1)தினேஷ் -24 s/o சுப்ரமணியன் 1/290, அன்னை அஞ்சுகம் நகர் உள்ளூர் ,.
2) புருஷேத்தமன் 19/s/o சிவாஜி 329, முப்பனார் நகர் முதல்தெரு செட்டிமண்டபம்
3)வசந்த் 21/ s/o மூர்த்தி 95, மோதிலால் தெரு ,
4)அன்பரசு 21s/o சுந்தர்ராஜன் 456/1, ஹலிமா நகர் செட்டிமண்டபம்

ஆகிய 4 பேரையும் உடனடியாக கைது செய்தனர்.மேலும் இந்த சம்பவம் நடக்க காரணமாக இருந்த திருவிடைமருதூர் திருப்பணிப்பேட்டையில் வசித்து வரும் நாகராஜ் மகனாகிய ஆட்டோ டிரைவர் குருமூர்த்தியையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இவ்வழக்கில் மிகவும் திறமையாக செயல்பட்டு வழக்கு பதிந்து சில மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த உதவிஆய்வாளர் திரு கீர்த்திவாசன் மற்றும் தனிப்படையினரை தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr.திரு .செந்தில்குமார் வெகுவாக பாராட்டினார்.

நமது தஞ்சாவூர் சிறப்பு செய்தியாளர்


குடந்தை ப.சரவணன்
தஞ்சாவூர்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!