Wed. May 22nd, 2019

திருப்பூர், ஊதியூர் காவல்நிலையத்தில் 23.ல் வாகன ஏலம்

148 Views

திருப்பூர்: காங்கேயம் எல்லைக்குட்பட்ட ஊதியூர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 11 இரு சக்கர வாகனங்கள் வரும் 23ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

காங்கேயம் தாலுகா ஊதியூர் காவல் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாமல் உள்ள 11 இரு சக்கர வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் காங்கேயம் தாசில்தார் திரு.மகேஸ்வரன் முன்னிலையில் வருகிற 23ம் தேதி காலை 11 மணிக்கு ஊதியூர் காவல் நிலைய வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ஊதியூர் காவல் நிலையத்தை நேரில் அணுகி ஏலத்தில் விட தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை நேரில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!