Wed. Jul 17th, 2019

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மாவட்ட காவல்துறை சார்பில் நூலகங்கள்

148 Views

விழுப்புரம்: மாணவர்களிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் வகையிலும் காவல் துறை குறித்து மாணவர்கள் மனதில் நல்ல எண்ணத்தை உருவாக்கும் வகையிலும் காவல்துறை சார்பில் பள்ளிகளில் நூலகத்தை தொடங்க காவலர்களுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி¸ அந்தந்த காவல்நிலையங்களுக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகள்¸ கல்வி நிலையங்களில் அவர்களது அனுமதியுடன் மாணவர்களுக்கான நூலகம் காவல் துறை சார்பில் அமைத்துத் தரப்பட உள்ளது. பள்ளிகளில் காவல் துறை சார்பில் குறிப்பிட்ட அலமாரிகளை ஒதுக்கீடாகப் பெற்று அங்கு காவல்துறை சார்ந்த புத்தகங்களை இடம்பெறச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.


04.07.2018 அன்று முதற்கட்டமாக திருக்கோவிலூர்¸ கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி¸ அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சித்தாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட நூலகங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.

காவலர்கள் தங்களால் இயன்ற அளவு நிதியை திரட்டியும் தன்னார்வலர்களிடம் இருந்து பெற்றும் பள்ளிகளில் இந்த நூலகங்கள் திறக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!