5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

Admin

சென்னை : கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி,

(1) திரு.சந்திரமோகன், காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருப்பூர் மாவட்டம்,

(2) திரு.ராஜசேகரன், காவல் ஆய்வாளர்,மத்திய புலனாய்வுப் பிரிவு, திருச்சி,

(3) திரு.பூங்கோதை, காவல் ஆய்வாளர், பண்ருட்டி காவல் நிலையம், கடலூர்,

(4) திரு.எஸ்.ஐ. என்.அழகிரி, காவல் உதவி ஆய்வாளர், மத்திய புலனாய்வு பிரிவு, விழுப்புரம் மாவட்டம்,

(5) திரு.பார்த்திபநாதன், தலைமைக் காவலர் 2864, கும்பகோணம் மேற்கு காவல் நிலையம், தஞ்சாவூர் மாவட்டம்

ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஜனவரி 26 குடியரசுத்தினத்தன்று காந்தியடிகள் காவலர் விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பரிசுத் தொகையாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

திருப்பூர் மாநகர் காவல் கிரிக்கெட் போட்டி, காவல்துறை ஆணையர் கோப்பையை வழங்கினார்

43 திருப்பூர்: திருப்பூர் மாநகர் காவல் துறையினர்கான கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இறுதி போட்டியாக இன்று மாநகர அதிவிரைவு படை அணியும் மாநகர் வடக்கு சரக அணியும் மோதின இதில் மாநகர அதிவிரைவு படை அணி வெற்றி பெற்று சுழற் கோப்பையை தட்டி சென்றது வெற்றி பெற்ற அணிக்கு மாநகர காவல்துறை ஆணையர் திரு.சஞ்சய்குமார் IPS அவர்கள் வெற்றி கோப்பையை வழங்கினார்.

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami