சாம்பியன் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு

Admin

சென்னை : காவல் துறையினரின் திறமையை வெளிக்கொணரவும், புலனாய்வுத் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் பணித்திறமையை அதிகரிக்கவும் காவல் பணித்திறனாய்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2019ம் ஆண்டின் 63வது தமிழக காவல் பணித்திறனாய்வுப் போட்டிகள் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஆவடியில் கடந்த 23.09.2019 முதல் 26.09.2019 வரை நடைபெற்றது.

மாநில காவல் பணித்திறனாய்வில் 20 போட்டிகள், 6 பிரிவுகளின் கீழ் முறையே அறிவியல் சார்ந்த புலனாய்வு, நிபுணத்துவ புகைப்படம், கணிணி விழிப்புணர்வு, வீடியோ பதிவு, நாசவேலை தடுப்பு மற்றும் மோப்ப நாய்களின் திறமை ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் குற்ற விசாரணை, குற்றவியல் சட்டங்கள், விதிகள், நடைமுறைகள், மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய எழுத்து தேர்வுகளும் நடத்தப்பட்டன.

தமிழக காவல்துறையின் அனைத்து மாவட்டங்களும் கலந்து கொண்ட இப்பணித்திறனாய்வு போட்டியில், சென்னை பெருநகர காவல் துறை சார்பாக 13 பெண் காவல் ஆளிநர்கள் உட்பட 45 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை பெருநகர காவல் அணியினர் 8 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 21 பதக்கங்கள் மற்றும் 08 சுழற்கேடயங்களையும் வென்றனர்.

மேற்படி 63வது மாநில காவல் பணித்திறனாய்வு போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சுழற்கேடயங்கள் பெற்ற சென்னை பெருநகர காவல் அணியினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (28.09.2019) அன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் திரு.ஊ.ஈஸ்வரமூர்த்தி, இ.கா.ப., மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள் திருமதி.ழு.நாகஜோதி, திரு.மு.ராஜேந்திரன், நவீன கட்டுப்பாட்டறை துணை ஆணையர் திரு..சாமிநாதன்,இ.கா.ப., மத்தியகுற்றப்பிரிவு உதவி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி தொடர்பான மேலும் புகைப்படங்களை காண கிளிக் செய்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் பாராட்டு

68 சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகள் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையார் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, திருவல்லிக்கேணி, ஹரி (எ) அறிவழகன் என்பவர் வசித்து வந்தார். கடந்த 19.09.2019 அன்று இரவு ஹரி வீட்டிலிருந்த போது அங்கு வந்த 3 நபர்கள் கத்தியால் சரமரியாக தாக்கியதில் சம்பவயிடத்திலே இறந்து விட்டார். இது குறித்து ஹரி தாய் லட்சுமி […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami