சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

Admin

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுக்குடி பகுதியில் வசிப்பவர் முத்துச்சாமி(63)என்பவர் 19.07.2019 அன்று டூவீலரில் பால் விற்பனை செய்ய தேவகோட்டை சென்றுகொண்டிருந்தபோது சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கி 5 பவுன் செயின் மற்றும் 5000 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் தாலுகா குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மனோஜ், கார்த்திக், அருண் ஆகியோர் மீது u/s 392 IPC-ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து 27.09.2019 அன்று புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 6 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கன்னியாகுமரியில் கொலை மற்றும் அடிதடியில் ஈடுப்பட்டவர் மீது 'குண்டர்' தடுப்பு சட்டம்

5 கன்னியாகுமரி மாவட்டம்: 28.09.2019 தோவாளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் விஜய்(32). இவர் மீது பூதபாண்டி காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை தொடர்ந்து ஜஸ்டின் விஜயை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr. N.ஸ்ரீநாத் IPS* அவர்கள் மாவட்ட ஆட்சியர் *திரு.பிரசாந்த் வடநெரே IAS* […]

மேலும் செய்திகள்

Bitnami