சென்னையில் 644 காவலர்களுக்கு பதக்கங்கள், காவல் ஆணையர் பங்கேற்பு

Admin

சென்னை: சிறப்பாக பணியாற்றிய போலிசாருக்கு முதல்வரின் காவலர் விருதினை காவல் ஆணையர் விஸ்வநாதன் வழங்கினார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழக அரசின் விருதுகளை காவல் ஆணையர் வழங்கினார்.

(28.9.2019)அன்று காலை எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் மேற்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 644 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் (Tamilnadu Chief Minister’s Constabulary Medal), அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 2019ம் ஆண்டுக்கான தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகரக் காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையுமின்றி சிறப்பாக பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 230 காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 289 காவல் ஆளிநர்கள், ஆயுதப்படையில் பணிபுரியும் 27 காவல் ஆளிநர்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம், நவீன கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் 98 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 644 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் முனைவர் ஆர்.தினகரன்,இ.கா.ப. (வடக்கு), திரு.ஏ.அருண்,இ.கா.ப., (போக்குவரத்து), திரு.சி.ஈஸ்வரமூர்த்தி,இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப. (தெற்கு), இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தி தொடர்பான மேலும் புகைப்படங்களை காண கிளிக் செய்க

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

தமிழகத்தில் 30% விபத்துக்கள் குறைந்துள்ளது, DGP பிரதீப் V. பிலிப் தகவல்

70 கோவை: கோவை அண்ணாசிலை சிக்னலில் காவல் துறை இயக்குனரும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை தமிழ்நாடு மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நிறுவனருமான டாக்டர் பிரதீப். வி.பிலிப் ஐபிஎஸ்., அவர்கள் தலைமை தாங்கி இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹெல்மெட் அணியும் சட்டம் வந்தவுடன் தமிழகத்தில் 30% விபத்து குறைந்துள்ளது என்பதை தெரிவித்தார். தமிழக காவல்துறை இயக்குநர் திரிபாதி அவர்கள் இதை மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார் என்பதை […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami