வேலூர் DIG மற்றும் SP தலைமையில் 2000 மரக்கன்றுகள் நடும் விழா

Admin

வேலூர்: வேலூர் மாவட்டம் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் சலமந்தம் கிராமத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வேலூர், திருவண்ணாமலை சரக காவல்துணை தலைவர் திருமதி. காமினி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார் மற்றும் வேலூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். காவல் ஆய்வாளர் திரு.பார்த்த சாரதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

சென்னை காவல்துறைக்கு மத்திய அரசின் 2 ‘ஸ்கோச்’ விருதுகள்

8 சென்னை: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்கான ‘ஸ்கோச்’ விருதுகளை சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை பெற்றுள்ளனர். ‘ஸ்கோச்’ விருதுகள் ஆண்டுதோறும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது. அரசின் துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையரின் கனவு திட்டம் சென்னை சட்டம் […]

மேலும் செய்திகள்

Bitnami