மதுரையில் இரவில் திருடிய திருடர்களை பிடித்த காவலர் தனிப்படையினருக்கு ஆணையர் பாராட்டு

Charles

மதுரை: மாநகரில் இரவில் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டார்கள். அவர்கள் உத்தரவுப்படி அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் (குற்றம்) அவர்களின் தனிப்படையினரான திரு. செந்தில் குமார் சார்பு ஆய்வாளர், திரு. பன்னீர்செல்வம் சிறப்பு சார்பு ஆய்வாளர், திரு. போஸ் தலைமை காவலர், திரு. வெங்கட்ராமன் முதல் நிலை காவலர் ஆகியோர் இணைந்து மதுரை மாநகரில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர் கடந்த 12.09.2019 ந் தேதி பெரியசாமி, சுதா ஆனந்த், ரவீந்திரன், ரெங்கசாமி ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 132 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட TN 60 AD 7632 TATA TIAGO காரையும் கைப்பற்றினர்.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் 33 வீட்டை உடைத்து குற்றங்கள் செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.  துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை நேற்று (24.09.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கையில் பணத்தை திருடிய பெண்னை காவல்துறையினர் கைது

66 சிவகங்கை: மாவட்டம் மதகுபட்டி அருகே கடநேரி பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரின் பணப்பையை அடையாளம் தெரியாத நம்பர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக மாதவி 24.09.2019 […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami