திருச்சி எஸ்பி அலுவலகத்தில் இருந்த 44 வயர்லஸ் பாக்ஸ்களை திருடிய 2 பேர் கைது

Admin

திருச்சி: திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்டம் முழுவதிலும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களில் மாற்றப்பட்ட வயர்லஸ் பாக்ஸ்கள் மற்றும் கையில் எடுத்து பேசும் மைக் என பழுதடைந்த பொருட்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஒரு மாதகாலத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த  44 வயர்லஸ் பாக்ஸ்கள் மற்றும் மைக்குகளை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த டெக்னிக்கல் பிரிவ போலீசார் இது தொடர்பாக எஸ்பியிடம் கூறினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காலை 5 மணிக்கே வந்து விட்டு 9 மணிக்கு செல்லும் துப்புறவு பணியாளர் சீனிவாசன் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இது தொடர்பாக சிசிடிவி கேமிராக்களிலும் சீனிவாசன் பாக்ஸ்களை எடுத்து செல்வது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தினமும் 2 என வயர்லஸ் பாக்ஸ்களை டிவிஎஸ் 50யில் எடுத்து சென்று திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள ஆனந்த் மெட்டல் கம்பெனியில் விற்றதும் அவர்கள் அதனை உடைத்து அதில் உள்ள காப்பர் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக காந்திமார்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து துப்புரவு பணியாளர் சீனிவாசன் மற்றும் வாங்கிய கனராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கன்னியாகுமரியில் காவல்துறையினர் சார்பில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு

2 கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 15.09.2019 அன்று நேசமணி நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.ஷம்சீர் மற்றும் போலீசார் ,Riders Of Kanyakumari குழுவுடன் இணைந்து நேசமணி காவல் நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்

Bitnami