20 வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த காவல்துறை

Admin

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள சூணாம்பேடு காவல்நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு சூனாம்பேடு ஊரைச் சேர்ந்த அருள் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற வழக்குகள் உடன் தொடர்பில் இருந்த இவர் தலைமறைவானார் .

சுமார் இருபது வருடங்களாக தலைமறைவாக இருந்த அவரை பெண் காவல் ஆய்வாளர் திருமதி. தரனேஷ்வரி மற்றும் அவரது குழுவினர் கடந்த வாரம் கைது செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் பெண் ஆய்வாளர் திருமதி. தரனேஷ்வரி , காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. பரசுராமன் மற்றும் திரு.மாணிக்கம், தலைமை காவலர்கள் திரு.ஞானசேகரன் மற்றும் திரு.வெங்கடாச்சலம் , காவலர்கள் அருண் பிரசாத் மற்றும் ஜெயராமன் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

திண்டுக்கலில் SP உத்தரவின்படி பேனர்கள் அகற்றம்

290 திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பதை உடனடியாக அகற்ற வேண்டும், என்ற உத்தரவிற்கிணங்க திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணங்கள், விளம்பரங்கள் மற்றும் கட்சிகள் தொடர்பாக அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பிளக்ஸ் பேனர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று மாவட்டம் முழுவதும் சுமார் […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami