ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

Admin
0 0
Read Time2 Minute, 45 Second

சென்னை: சென்னை ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, கீழ்ப்பாக்கம், வரதம்மாள் தோட்டம் பகுதியில் வசித்துவரும் பத்மநாபன், வ/54, த/பெ.சண்முகம், 08.09.2019 அன்று காலை சுமார் 9.00 மணியளவில் சௌகார்பேட்டை, அருணாசலம் தெருவிலிருந்து மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆட்டோவில் சவாரி ஏற்றிக்கொண்டு சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இறக்கிவிட்டுள்ளார். அவர்கள் இறங்கும்போது, தவறுதலாக ஒரு சூட்கேஸை தவறவிட்டு சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன் மதியம் தனது ஆட்டோவின் பின் சீட்டை பார்த்த போது சீட்டிற்கு அடியில் ஒரு சூட்கேஸ் இருப்பதை கண்டு, அதனை எடுத்து நேர்மையாக தனது வீட்டின் அருகில் உள்ள G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அதில் வைரம் மற்றும் தங்க நகைகள், ரொக்கம் ரூ.15,000/- மற்றும் ஆதார் அடையாள அட்டை இருந்துள்ளது. உடனே G-5 காவல் நிலைய போலீசார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விசாரணை செய்ததில் ஆட்டோவில் தவறவிட்ட சூட்கேஸ் நித்து, வ/20, த/பெ.ஜெகராம், ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

ஆட்டோவில் கண்டெடுத்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் எஸ்.பத்மநாபனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் நேற்று (13.09.2019) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

20 வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த காவல்துறை

51 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள சூணாம்பேடு காவல்நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு சூனாம்பேடு ஊரைச் சேர்ந்த அருள் என்பவர் மீது வழக்கு பதிவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami