மதுரையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

Admin
0 0
Read Time1 Minute, 40 Second

மதுரை: போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
மதுரை தெப்பகுளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சென்ற ஆட்டோவை, போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் இருந்த மணிகண்டன் என்பவர், தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் காவல்துறை சார்பு ஆய்வாளரை தாக்கியுள்ளார். பின்னர், ஆட்டோவில் இருந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடினர். அவர்களை துரத்தி சென்ற போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி, தப்பியோடிய கும்பலை சேர்ந்த மணிகண்டன், சிவபிரகாஷ், கார்த்திக் ,ரமேஷ், ராஜகணேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் ரவுடிகள் சிலர் கப்பலூர் சுங்கசாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது போலிசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் காவல்துறையினர் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுப்பட்டவர்கள் கைது

37 மதுரை மாவட்டம்: பாலமேடு, ராமகவுண்டம்பட்டி ஓடை அருகே போலீசார் ரோந்து சென்றபோது அங்கே டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் அரசு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami