Read Time1 Minute, 18 Second
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செம்மணம்பட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 14.12.2017 அன்று குப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடத்திச் சென்று மலைப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடமதுரை காவல்துறையினர், வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் அவர்கள் தலைமையில் விசாரணை மேற்கொண்டு ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 22.08.19 திண்டுக்கல் மகளிர் நீதிமன்ற (விரைவு) நீதிபதி உயர்திரு.புருஷோத்தமன் அவர்கள் வழக்கின் எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும்.