கொலை வழக்கில் விரைவாக செயல்பட்ட திருவள்ளூர் காவல்துறையினர், 5 பேர் கைது

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரக்கோணம் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் திருவள்ளூர் அருகில் உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 30) என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி ஓட்டலுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் உத்தரவின் பேரில் திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சேகர் தலைமையில் காவல் ஆய்வாளர் திரு.முருகன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு.சரவணன், திரு.சிவா, குமார் மற்றும் காவல்துறையினர் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த ஜபான் என்கிற விமல்ராஜ் (25), கோபிராஜ் (24), சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் (26), அஜித்குமார் (26) மற்றும் கார் டிரைவர் சதீஷ் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் பெருமாள்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதை அறிந்த காவலர்கள் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.

அப்போது காவல்துறையினரைக் கண்டதும் அவர்கள் அனைவரும் தப்பி ஓடி சுவர் ஏறி குதித்தபோது கீழே விழுந்து கைஇ கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு ஆண்டாக அவர்களுக்கும் மகேஷ்குமார் தரப்பினருக்கும் இடையே வாலிபால் போட்டியில் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

ஈரோட்டில் பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது

6 ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தயிர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (51). இவருடைய மனைவி மீனா என்கிற சகாயமேரி (40). இவர்கள் 2 பேரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தாக கூறப்படுகிறது. இவர்களிடம் அந்த பகுதியை சேர்ந்த பலர் சீட்டு பணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் கொத்தமங்கலம் நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த மல்லிகா உள்ளிட்ட 6 பேர் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகார் […]

மேலும் செய்திகள்

Bitnami