காஞ்சிபுரம்: இரவு காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்கச் சென்று இருந்தோம் மகிழ்ச்சியுடன் அத்தி வரதரை தரிசித்துவிட்டு பச்சையப்பாஸ் கார் பார்க்கிங்கில் எங்களுடைய காரை எடுப்பதற்கு ஆட்டோவில் அந்த இடத்தை வந்து வந்தடைந்தோம் அப்பொழுது எனது நண்பர் திரு பி எஃப் ஐ ராஜா அவர்களின் செல்போன் ஆட்டோவில் தவறவிட்டு விட்டார் என்று தெரிந்தது உடனே அந்த மொபைலுக்கு தொடர்பு கொண்டபோது ஆட்டோ டிரைவர் திரு.ஷார்ப் ராஜேஷ் என்பவர் என்னிடம் தான் இருக்கிறது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார் எங்களால் வர இயலவில்லை தயவு செய்து நீங்கள் எடுத்துக் கொண்டு வந்து எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று பணிவோடு கேட்டதற்கு இணங்க அவர் நாங்கள் இருந்த இடத்திற்கு திரும்பி வந்து செல்போனை தந்தார் நாங்கள் மனதார உதவி செய்ய முன் வந்த போது பணம் தான் வேண்டும் என்று நினைத்து இருந்தால் இந்த போனை நானே வைத்துக் கொண்டிருப்பேன் என்று கூறி எங்களை நெகிழ வைத்தார் கடவுள் இருக்கிறார் என்பதற்கும் நல்ல மனித உள்ளம் படைத்தவர்கள் இன்னமும் என் நாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கும் இதுவே ஒரு சான்று வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு அந்த தம்பி திரு ராஜேஷ் அவர்களுக்கு எங்கள் அனைவரின் சார்பிலும் நன்றி.
கோயில் நகரம் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நல்ல எண்ணத்துடனும் நல்ல சிந்தனைகளும் இருப்பதற்கு இதுவே ஒரு சான்று
காஞ்சிபுரத்தில் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை அழைத்து பாராட்டினார்
Read Time2 Minute, 10 Second