மதுரையில் உதவி ஆய்வாளர் முயற்சியில் – மாணவ மாணவிகளுக்கு மாலைநேர பயிற்சி வகுப்புகள் 

Admin
Read Time5 Second

மதுரை: B3-தெப்பக்குளம் ( ச&ஒ) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்களின் சொந்த முயற்சியால் ஐராவதநல்லூர் மந்தையம்மன் கோவில் அருகில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் மூலமாக மாலை நேர பயிற்சி வகுப்புகளை நடத்த உதவி ஆய்வாளர் ஏற்பாடு செய்தார். நேற்று (15.08.2019) மாலை நேர பயிற்சி வகுப்பில் B3-தெப்பக்குளம் ச&ஒ காவல்நிலைய ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு கவிதை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் பரிசு பொருட்களை வழங்கினார். மேலும் மாலை நேர பயிற்சி வகுப்புகளை நடத்த உதவிய தியாகராஜர் கல்லூரி மாணவர்களான
1) K.ரவிகுமார்,M.Sc., கணிதம் இரண்டாம் ஆண்டு,
2) B.சிவானந்தன்,B.Sc., கணிதம் மூன்றாம் ஆண்டு,
3) P.பரத்பாண்டியன்,B.Sc., வேதியியல் இரண்டாம் ஆண்டு.
ஆகிய மூவருக்கும் அவர்களின் சேவையை பாராட்டி மதுரை மாநகர காவல்துறை சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற சென்னிமலை காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள்

7 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email ஈரோடு: 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு […]

மேலும் செய்திகள்

Bitnami