மதுரை மாநகர காவல் துறைக்கு “ஸ்மார்ட்’ ஈ-சலான்” இயந்திரம்

Admin
0 0
Read Time2 Minute, 51 Second

மதுரை: *இன்று (15.08.2019) முதல் மதுரை மாநகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறும் பொதுமக்களுக்கு காவல்துறையினரால்
ஸ்மார்ட் ஈ-சலான் POS (Point of Sale) இயந்திரம் மூலமாக இரசீது உடனுக்குடன் வழங்கப்பட்டது. *மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ஈ-சலான் மூலமாக ரசீது வழங்கப்பட்டு அதற்கான அபராத தொகையை பொதுமக்கள் SBI BANK, POST OFFICE , இ- சேவை மையம், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம் மற்றும் mparivahan portal மூலமாக Payment Option –யை தேர்வு செய்து இணைய வங்கி கணக்கின் மூலமாகவும் செலுத்தலாம். *இந்த ‘ஸ்மார்ட்’ ஈ-சலானின் முக்கிய நன்மைகள் என்னவென்றால் போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறுபவர்களை எளிதில் கண்டறியமுடியும். *காவல்துறையினர் ஒரு வாகன பதிவு எண்ணைக்கொண்டு வாகனத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதையும், அந்த வாகனம் திருட்டு வாகனமா என்பதையும் மற்றும் அந்த வாகனம் ஏதேனும் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா என்பதையும் எளிதில் அடையாளம் காண முடியும்.

* மேலும் இந்த இயந்திரத்தில் வாகன ஓட்டுனர் உரிமத்தில் உள்ள பதிவு எண்ணை பதிவு செய்தவுடன் ஓட்டுநர் உரிமம் உண்மையானதா அல்லது போலியானதா எனவும் எளிதில் கண்டறியமுடியும்.* “ஸ்மார்ட்’ ஈ-சலான்” இயந்திரம் மூலம் கொடுக்கப்படும் ரசீதில் உள்ள குற்றவிவரங்கள் அனைத்தும் இணையதளத்தின் மூலமாக உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். *போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அதற்கான அபராத தொகையை மூன்று மாதத்திற்குள் செலுத்த தவறினால் அவரது வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். * “ஸ்மார்ட்’ ஈ-சலான்” இயந்திரம் மதுரை மாநகரில் போக்குவரத்து காவல்துறையினருக்கு 25 இயந்திரங்களும், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களுக்கு 7 இயந்திரங்களும் மொத்தம் 32 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் உதவி ஆய்வாளர் முயற்சியில் - மாணவ மாணவிகளுக்கு மாலைநேர பயிற்சி வகுப்புகள் 

100 மதுரை: B3-தெப்பக்குளம் ( ச&ஒ) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்களின் சொந்த முயற்சியால் ஐராவதநல்லூர் மந்தையம்மன் கோவில் அருகில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami