37
Read Time41 Second
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலைய போக்குவரத்து காவலர் திரு.ஆண்டிச்சாமி என்பவர் நகர் பகுதியில் போக்குவரத்து பணி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு நடைமேடையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கண்டதும் அருகில் சென்று பார்த்ததில் முதியவர் பசியில் இருந்ததை அறிந்து உடனடியாக அவருக்கு உணவு வாங்கி கொடுத்தார். காவலரின் மனிதாபிமான செயலை கண்ட அப்பகுதி மக்கள் காவலரை வெகுவாக பாராட்டினர்.