54
Read Time1 Minute, 9 Second
சென்னை: சென்னை பெரம்பூரை சேர்ந்த மூதாட்டி ராதாபாய் க/பெ ஹரிதாஸ் கடந்த 05/08/2019 அன்று காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற போது தான் உடன் வைத்திருந்த பர்சை தொலைத்து விட்டார் அதில் அசல் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் 3500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிக்கொடுத்துள்ளார். அச்சமயம் அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை 5ஆம் அணியை சேர்ந்த காவலர்(7777) ப.ஆசிர்வாதம் என்பவர் பர்சை கண்டெடுத்து பணியை முடித்து சென்னை பெரம்பூரில் உள்ள மூதாட்டியின் வீட்டுக்கே சென்று ஒப்படைத்துள்ளார். அனைவரையும் நெகிழ வைத்த இச்சம்பவம் பொது மக்கள் மற்றும் காவலர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.