Thu. Feb 21st, 2019

சென்னையில் 31 போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

15 Views

சென்னை பெருநகர காவல்துறையில் 31 போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார். சென்னை காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும்,பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் ஆய்வாளர்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி சென்னை காவல்துறையில் போக்குவரத்துப் பிரிவு பணியாற்றும் ஆய்வாளர்களில் 31 பேரை பணியிட மாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 17 காவல் ஆய்வாளர்கள் மீண்டும் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி.கே.நரசிம்மன் வண்ணாரப்பேட்டைக்கும், எம்.முத்து சேத்துப்பட்டுக்கும், ஏ.ராமராஜ் அம்பத்தூருக்கும், ஆர்.சாம் சுந்தர் சைதாப்பேட்டைக்கும், பி.சுவாமிநாதன் மணலிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மொத்தம் 31 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 31 காவல் ஆய்வாளர்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!