Sat. Feb 23rd, 2019

இராமநாதபுரத்தில் 196 கிலோ கஞ்சா பறிமுதல்

12 Views

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (06.02.2019-ம் தேதி) காலை உச்சிப்புளி அருகே உள்ள சேது நகர் என்ற இடத்தில் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான மாந்தோப்பில் உள்ள ஒரு அறையில் 196 KG கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குற்றவாளிகள் பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதேபோன்று பிற பகுதிகளிலும் கஞ்சா பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. கஞ்சா விற்பனையில் துரிதநடவடிக்கை மேற்கொண்ட ராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு. ஓம்பிரகாஷ்மீனா ஐ.பி.எஸ் தலைமையிலான காவல்துறைக்கு பொதுமக்களிடையே பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் வாழ்த்துக்களும் வணக்கங்களும்..

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!