Sat. Feb 23rd, 2019

சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி: S.P. முரளி ரம்பா பங்கேற்பு

10 Views

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் தூத்துக்குடி நகர காவல் துறையினர் இணைந்து 30 வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.முரளிரம்பா, IPS தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு குரூஸ் பர்னாந்து சிலையை வந்தடைந்தது. ஒயிலாட்டம், போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்களை வாகனம் ஓட்டிகளுக்கும், பொது மக்களுக்கும் வழங்கினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படை தளபதி திரு.பாலமுருகன், துணைத்தளபதி கௌசல்யா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு தூத்துக்குடி நகர டிஎஸ்பி திரு.பிரகாஷ் முன்னிலைவகித்தார்.

இப்பேரணியில் தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு.முத்து ,மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு.ரேனியஸ் ஜேசுபாதம், தெர்மல் நகர் காவல் ஆய்வாளர் கோமதி, காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஜென்சி, காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் சிசில், உதவி ஆய்வாளர் திரு.மயிலேறும் பெருமாள், மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

பேரணியில் ஊர்க்காவல் படையினர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!