Thu. Feb 21st, 2019

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய அரக்கோணம் போக்குவரத்து போலீசார்

12 Views

வேலூர்: தமிழகம் முழுவதும் கடந்த திங்கள் கிழமை முதல் சாலை பாதுகாப்பு வார விழா அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக அரக்கோணத்தில் சாலை பாதுபாப்பு வார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருத்தணி ரோட்டில் அடைந்துள்ள இந்திரா காந்தி சிலை அருகே நடந்த விழாவிற்கு போக்குவரத்து ஆய்வாளர் திரு.கனி தலைமை வகித்தார். டவுன் காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். போக்குவரத்து உதவி ஆய்லாளர் திரு.மிதிலேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டியன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அந்த வழியாக ஹெல்மெட் அணிந்தவர்களுக்கும் 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அதேபோல ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களா? என விசாரித்து அவர்களுக்கு மட்டும் இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.

இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டியன் பேசுகையில், யார் யாரெல்லாம் ஹெல்மெட் வாங்குகின்றனரோ அவர்கள் ஹெல்மெட் அணியாமல் இனிமேல் வாகனத்தில் வந்தால்., அவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.

இதைதொடர்ந்து மாலையில் புது பேருந்து நிலையத்திலும் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.

 

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!