Thu. Feb 21st, 2019

விபத்துகளை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், வேலூர் எஸ்.பி வேண்டுகோள்

16 Views

வேலூர்: தமிழக அரசின் 30வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு ராணிப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS  தலைமை வகித்தார்.

ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி பாட்டப்பசாமி, அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர் பேசி வேலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார், அதிகமான சாலைவிபத்துக்கள் மற்றும் உயிரிழடப்புகள், டூவிலர்களில் தான் நிகழ்கின்றது. அதிலும் தலைகாயங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தான் அதிகம். தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது, வேகக்கட்டுபாடு அவசியம். வழியில் வைக்கப்பட்டுள்ள ஸ்பிடுலிமிட்டை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்பதை உணர வேண்டும். முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு, சாலை விபத்தால் ஏற்படும் இறப்பு விகிதம் 21% சதவீதம் குறைந்துள்ளது. இதை மேலும் குறைக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக சாலை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. விழாவில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.சிவராஜ், ஆய்வாளர்கள் திரு.ஆனந்தன்(ராணிப்பேட்டை), திரு.திருநாவுக்கரசு (வாலாஜா), திரு.புகழேந்தி (ஆற்காடு), திரு.காண்டீபன் (திமிரி) மற்றும் போக்குவரத்து காவல்துறையினர், கல்லூரி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!